இந்தியாவில் ஒருநாளில் 80,834 பேருக்கு கொரோனா தொற்று : 3,303 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,303 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 834 ஆக குறைந்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 3,303 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 1 லட்சத்து 32 ஆயிரத்து 62 பேர் நேற்று குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 80 இலட்சத்து 43 ஆயிரத்து 446 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா பாதித்த 10 லட்சத்து 26 ஆயிரத்து 159 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 25 கோடியே 31 லட்சத்து 95 ஆயிரத்து 40 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Author: admin