பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியல் தாங்க ஸ்டாலின்: பதாகை ஏந்தி வானதி சீனிவாசன் போராட்டம்

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் வீடுகள் முன்பு நின்று இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன்படி கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், ‘தமிழக அரசே டாஸ்மாக்கை திறக்காதே’ எனும் வாசகங்களுடன் கூடிய பதாகை ஏந்தி தனது வீட்டின் முன்பு போராட்டம் செய்தார்.


Author: sivapriya