சமையல் அறைக்கு சென்ற உடன் கட்டாயம் பெண்கள் செய்ய வேண்டிய 2 விஷயங்கள்! இதை செய்தாலே போதும் வீட்டில் சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற வார்த்தையே இருக்காது.

எந்த ஒரு பொருளின் அருமை பெருமைகளும் நமக்கு இருக்கும் போது தெரிவதே கிடையாது. அது நம்முடன் வாழும் மனிதர்களாக இருந்தாலும் சரி, அல்லது நாம் பயன்படுத்தக் கூடிய பொருளாக இருந்தாலும் சரி, அல்லது நம்முடன் இருக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் சரி. எடுத்துக்காட்டுக்கு, ஆரோக்கியமாக சுதந்திரமாக வாழ்ந்து வந்த நம்முடைய வாழ்க்கையின் அருமை பெருமைகளை, இதுவரை நாம் உணர்ந்து ரசித்து வாழ்ந்ததே கிடையாது. ஆனால், இப்போதெல்லாம் லாக் டவுனில், கண்ணுக்கு தெரியாத வைரஸை கண்டு பயந்து நடுங்கி வீட்டிற்குள் முடங்கி இருக்கும் போது தான் புரிகிறது! நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு சுகந்திரத்தை இழக்கின்றோம் என்பது.

plant-in-kitchen

சரி, இப்போது பதிவுக்கு செல்வோம். பொதுவாகவே வாழ்க்கையில் நமக்கு கிடைக்கக்கூடிய நல்ல விஷயங்களுக்கு அந்த கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த வரிசையில் தினம்தோறும் நம்முடைய பசியைப் போக்கி, நாவிற்கு ருசியை தரக்கூடிய உணவுப் பொருட்களை, சமைக்கும், சமையல் அறையினுடைய மகத்துவத்தை நம்மில் பலபேர் புரிந்து கொள்வதே கிடையாது.

ஏதோ சமையலறை என்ற ஒன்று இருக்கிறது. காலையில் எழுந்தால் பசிக்கும். அதற்கு சமைக்க வேண்டும், என்ற கடமை! இந்த நினைப்புடன் பெண்கள் சமையல் அறைக்குள் சென்று சமையலை தொடங்கக்கூடாது. காலையில் எழுந்து அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டரில் கேஸ் தீர்ந்து விட்டால் எவ்வளவு கஷ்டமாக உள்ளது. ஒருநாள் அக்னி பகவான் நம்முடைய வீட்டில் பிரவேசம் செய்யவில்லை என்றாலும் அதன் மூலம் நமக்கு எவ்வளவு பிரச்சனைகள். இருப்பினும் இந்த அன்னபூரணியின் மகத்துவத்தையும், அக்னி பகவானின் மகத்துவத்தையும் தினமும் நாம் நினைவு கூர்வதே கிடையாது. இது மிகப்பெரிய தவறு.

women4

காலையில் எழுந்து சமையலறைக்கு செல்வதற்கு முன்பாக பூஜை புனஸ்காரங்களை இன்றைய சூழ்நிலையில் செய்ய முடியாது. இருப்பினும் சமையல் அறைக்கு சென்ற உடன் அக்னி பகவானை ஒருமுறை மனதார நினைத்து வணங்கி விட்டு, அன்னபூரணியை ஒருவரை நினைத்து மனதார வணங்கி விட்டு அதன் பின்பு சமையலை தொடங்க வேண்டும்.

குறிப்பாக உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் உப்பு, பச்சரிசி, வெல்லம் அல்லது சர்க்கரை இந்த மூன்று பொருட்களிலும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து அக்கினி பகவானுக்கும் அன்னபூரணி தாயாருக்கும் சமர்ப்பணம் செய்வதாக நினைத்து தனியாக எடுத்து வைத்து விட வேண்டும்.

Annapoorani

இன்று காலை இப்படி வைக்கப்பட்ட இந்த மூன்று பொருட்களும், மறுநாள் காலை வரை அப்படியே ஒரு தட்டில் தனியாக இருக்கட்டும். மறுநாள் காலை சமையலை தொடங்குவதற்கு முன்பாக, வாசல் கூட்டும் போது இந்த பொருட்களை கொண்டு போய் உங்களுடைய வாசலில் ஒரு ஓரமாக வைத்து விட்டால் எறும்புகள் சாப்பிட்டு விடும்.

aknibagavan

அதிகமாக பொருட்களை வீணாக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. ஒரு கல் உப்பு, 1/2 ஸ்பூன் பச்சரிசி, ஒரு சிட்டிகை வெல்லம் போதும். இதன் மூலம் என்ன நன்மை நடந்து விடப்போகிறது என்று நினைத்து இதை செய்யாதீர்கள். மனதார உங்களுடைய நன்றியை அக்னி பகவானுக்கு அன்னபூரணி தாயாருக்கும் தெரிவிப்பதாக நினைத்து இந்த செயலை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Author: admin