கேரளா: இன்று இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு; வெறிச்சோடிய சாலைகள்

கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
 
கேரளாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே கேரளாவில் வரும் 16 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
 
image
இதன் காரணமாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகள் இன்றி பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் பார்சல் வழங்குவதற்கு அனுமதி இல்லாததால் உணவை நேரடியாக சென்று விநியோகிக்கும் பணி மட்டுமே நடைபெறுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

 

Author: sivapriya