இந்த மாத இறுதிவரை பயணத்தடை நீடிக்கப்படுமா?…

Read Time:1 Minute, 8 Second

தற்போது உள்ள பயணக்கட்டுப்பாட்டினால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவு ஏற்பட்டுள்ளதாகவும். பயணக்கட்டுப்பாட்டை நீக்கினால் தொற்று அதிகரிக்க கூடும் என வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் பயணத்தடைகளை கடுமையாக அமுல்படுத்தவும், திறக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அருகில் PCR பரிசோதனைகளை அதிகரிக்கவும், கோவிட் திரிபு மற்றும் கோவிட் அதிகம் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை நிறுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பயணக்கட்டுப்பாட்டை இந்த மாத இறுதிவரை அமுல்படுத்துமாறு அரச வைத்தியர் சங்கம் ஜனாதிபதி, சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்

Author: admin