மணமகனுக்கு மச்சினிச்சிக் கொடுத்த பம்பர் முத்தம்! அதிர்ச்சியில் மணமகள்!

marriage 2
marriage 2

மணக்கோலத்தில் இருந்த அக்காவின் கணவருக்கு, மணப்பெண் தங்கை கொடுத்த முத்தம் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் கொடிய கொரோனா தொற்று தற்போது ஓரளவு குறைந்து கட்டுக்குள் வந்து ஆறுதல் அளித்து வருகிறது.

நாட்டின் பல பகுதிகளில் தற்போது திருமண சீசன் என்பதால் பல்வேறு இடங்களில் திருமண விழாக்கள் களை கட்டியுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருமண விழாக்கள் நடந்து வருகின்றன.

பெரும்பாலும் 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மேல் திருமண விழாவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் நடந்து வரும் பல திருமணங்களில் வினோத, சுவாரசியமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

சில வாரங்களுக்கு முன்பு வட இந்தியாவில் நடந்த ஒரு திருமணத்தில் மணக்கோலத்தில் இருந்த மணமகன் திடீரென எழுந்து போட்ட குத்தாட்டம் நாடு முழுவதும் வைரலானது.

இந்த நிலையில் திருமணத்தில் நடந்த மற்றோரு சுவாரசியமான சம்பவத்தை இப்போது காண்போம். பொதுவாக அக்காவின் கணவரை அவரது தங்கை நமது ஊர் பாஷையில் சொன்னால் கொழுந்தியாள் கிண்டல் செய்வது வழக்கமாக நடைபெறும் ஒன்று.

marriage 1 1
marriage 1 1

மணமேடையில் மண கோலத்துடன் மணமகனும், மணப்பெண்ணும் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார்கள். அப்போது மணமகனுடன் ஒரே நாற்காலியில் அமர்ந்து இருக்கும் மணப்பெண்ணின் தங்கை(கொழுந்தியா) அக்காவின் கணவரான மணமகனுக்கு திடீரென முத்தம் கொடுத்தார்.

முத்தம்னா சாதாராண முத்தம் அல்ல. ஆங்கில படத்தில் காண்பிப்பார்களே அதுபோன்ற வெறித்தனமான முத்தம். மணப்பெண்ணின் தங்கையின் செயலை பார்த்து அங்கு இருந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

மணப்பெண் அதிர்ச்சியை வெளியே காட்டி கொள்ளவில்லை என்றாலும், அவரது இதயமும் ‘லப் டப் லப் டப்’ என்று வேகமாக கண்டிப்பாக அடித்திருக்கும்.

குறும்புக்காக மணப்பெண்ணின் தங்கை முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ”குறும்பு என்றாலும் அதுக்கும் ஒரு அளவு வேண்டாமா” என்று அங்கு இருந்த சில பெரியவர்கள் கோபத்துடன் கூறினார்கள்.

அதே வேளையில் அங்கு இருந்த திருமணமான பல ஆண்கள் ” நமக்கு இப்படி ஒரு கொழுந்தியா இல்லாம போய் விட்டதே. இவன் கொடுத்து வச்ச மனுஷன்யா” என்று புலம்பி தவிர்த்திருக்கலாம். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Author: admin