சரக்கு அடிக்க வசதியாக ‘சைட் டிஷ்’; கடைகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

photoon tasmac - 1

ஜூன் 14 திங்கள் கிழமை நாளை முதல் மதுக் குடியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்க உத்தரவிடப் பட்டுள்ள நிலையில், அதற்கு உறுதுணையாக கார வகைகள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கலாம் என அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

தமிழக அரசு ஏற்கெனவே ஜூன் 14ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப் படும் என்று அறிவித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வெறும் சரக்கு மட்டும் வாங்கி அடித்தால் என்ன இருக்கு?

அதுக்கு தேவையான சைட் டிஷ்லாம் வாங்க கடைகள் மூடியிருக்கே என்று அங்கலாய்த்த மதுக்குடியர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யும் கடைகளும் நாளை முதல் திறக்கப் படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பேக்கரிகள் உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது போல இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது… என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

Author: admin