விமான நிறுவனங்களில் ஹேக் செய்யப்பட்ட தகவல்கள்! பின்னணியில் சீன ஹேக்கர்கள்?

hacker
hacker

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் விமான நிறுவனமான ஏர் இந்தியா தங்களது இணையதளத்தில் தகவல் திருட்டு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த தகவல் திருட்டால் 4.5 மில்லியன் பயணிகளின் பாஸ்போர்ட், டிக்கெட் விவரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் சிவிவி மற்றும் சிவிசி எண்கள் சர்வரில் சேமிக்கப்படாததால் அவை திருடப்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு தகவல் திருட்டு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது தெரியாத நிலையில், இதில் சீன ஹேக்கர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற வகையிலான தகவல்கள் ஃபோர்ப்ஸ் போன்ற மீடியாக்களால் முன் வைக்கப்படுகின்றன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author: admin