விராட் கோலியின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜான் சீனா


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் WWE நட்சத்திர வீரர் ஜான் சீனா. இந்தியாவும், நியூசிலாந்து அணியும் வரும் வெள்ளிக்கிழமை அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மோத உள்ளன. இந்நிலையில் இந்த படத்தை ஜான் சீனா பகிர்ந்துள்ளார்.
அந்த படத்திற்கு அவர் கேப்ஷன் எதுவும் கொடுக்கவில்லை. இதே போல இந்தியா – நியூசிலாந்து அணிகள் கடந்த 2019இல் உலக கோப்பை அரையிறுதியில் மோதி விளையடிய போது ஜான் சீனா, கோலி படத்தை பகிருந்திருந்தார். அதை வைத்து பார்க்கும் போது அவர் கோலியின் தீவிர ரசிகராக இருக்கலாம் என வெளிப்படுத்துவதாக உள்ளது.

View this post on Instagram

A post shared by John Cena (@johncena)

“எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் புரிதலுக்காக இந்த படங்களை விளக்கங்கள் ஏதும் இல்லாமல் பகிர்கிறேன். பார்த்து மகிழுங்கள்” என பயோவில் தெரிவித்துள்ளார் ஜான் சீனா.

Author: sivapriya