டாஸ்மாக்கை மூடுவது தொடர்பான கருத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது: எல்.முருகன்

டாஸ்மாக் கடையை மூடுவது தொடர்பான கருத்தில், திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி, சென்னை தி.நகரில் கருப்பு பேட்ஜ் அணிந்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். கொரோனா பரவல் குறையாத நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதே போல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

Author: sivapriya