பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்க அனுமதி…

நாட்டில் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும்போது வாரத்துக்கு இரண்டு நாட்கள் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, மற்றும் இந்த நடவடிக்கை மொத்த வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கும் நடமாடும் விற்பனையில் ஈடுபடுவோருக்கும் அனுமதி பத்திரங்களை காண்பித்து கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுள்ளது.

இரத்மலானை, பிலியந்தலை, நாரஹென்பிட்டி, வெலிசறை, மீகொட, நுவரெலியா, தம்புளை, கெப்பட்டிபொல, தம்புத்தேகம, மற்றும் நாவலபிட்டிய பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன என விவசாய இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

Author: admin