22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்ற நியூசிலாந்து அணி


இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. எட்ஜ்பேஸ்டனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றுள்ளது நியூசிலாந்து.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 303 ரன்களை குவித்தது அந்த அணி. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 388 ரன்களை குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 122 ரன்களை மட்டுமே இங்கிலாந்து எடுத்தது. அதனால் 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது நியூசிலாந்து. 10.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை எடுத்தது நியூசிலாந்து வெற்றி பெற்றது.

View this post on Instagram

A post shared by BLACKCAPS (@blackcapsnz)


இதன் மூலம் 1999க்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைபற்றியுள்ளது நியூசிலாந்து அணி. இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது. அடுத்ததாக நியூசிலாந்து அணி வரும் வெள்ளி அன்று இந்தியாவுடன் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சவுத்தாம்ப்டனில் விளையாட உள்ளதது.

Author: sivapriya