தோல் கருப்பான, பழுத்த வாழைப்பழங்களை தூக்கி குப்பையில் போடுவீங்களா? இது தெரிஞ்சா இனி கடையிலிருந்து பழுத்த கருப்புத்தோல் வாழைப்பழத்தை மட்டும் தான் நீங்க வாங்குவீங்க.

தோல் மஞ்சள் நிறத்தில் இருக்கும் வாழைப்பழங்களை விட தோல் கருப்பான நன்றாக பழுத்த வாழைப் பழங்களில் தான் நம்முடைய உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்து இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நம்முடைய வீட்டில் வாழைப்பழம் கொஞ்சம் பழுத்து விட்டாலே போதும். அதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடாமல் தவிர்த்து விடுவோம். அதை தூக்கி குப்பையில் போடுவோம். இனி அந்த வாழைப்பழத்தை தூக்கி குப்பையில் போடாதீர்கள்.

banana3

நம்முடைய உடலுக்கு அதிகப்படியான சக்தியைக் கொடுக்கும் அந்த பழுத்த வாழைப்பழத்தை வைத்து ஒரு சூப்பர் தோசை ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் நான்கு தோல் கருப்பான வாழைப் பழங்களை எடுத்து, தோல் உரித்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் போடும் போது கொஞ்சம் சிறு சிறு துண்டுகளாக வாழைப்பழத்தை வெட்டிப் போட்டுக் கொள்ளுங்கள்.

banana1

அதன்பின்பு அந்த அரைத்த வாழைப் பழத்துடன் முட்டை – 1, ஏலக்காய் – 2, இனிப்பு சுவைக்கு ஏற்ப வெல்லம், 2 குழிக்கரண்டி கோதுமை மாவு, 1/2 டம்ளர் பால் இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து, மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் கூட பாலை சேர்த்து ஊற்றிக் கொள்ளலாம்.

உங்களுக்கு முட்டை பிடிக்காது எனும் பட்சத்தில் முட்டையை நீங்கள் தவிர்த்துக் கொள்ளலாம். முட்டைக்கு பதிலாக ஆப்ப சோடா மாவு பயன்படுத்திக்கொள்ளுங்கள். மற்ற பொருட்களை எல்லாம் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது அரைத்த இந்த விழுதை ஒரு தனியான அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். ஊத்தப்பம் வார்க்கும் அளவிற்கு இந்த தோசை மாவு இருந்தால் பரவாயில்லை.

banana2

இந்த மாவு ரொம்பவும் திக்காக இருந்தால் மீண்டும் கொஞ்சம் பால் சேர்த்து இந்த மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். மாவை தண்ணீராக கரைத்து வைத்துக் கொள்ளக் கூடாது.

banana4

மாவு தித்காகத் தான் இருக்க வேண்டும். தோசைக்கல்லை சூடு செய்து நெய் அல்லது எண்ணெய் தடவி இந்த தோசை மாவை எடுத்து ஊத்தப்பம் போல ஊற்றி தேவைப்பட்டால், இந்த தோசையின் மேலே நட்ஸ் வகைகளை தூவி சுட்டு குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள். நிச்சயமாக விருப்பமாக சாப்பிடுவார்கள். முட்டையை தவிப்பவர்கள் 1/4 ஸ்பூன் சோடா உப்பை இந்த மாவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: admin