தமிழ்நாட்டில் இன்று 14,016 கொரோனா தொற்றால் பாதிப்பு – 267 பேர் உயிரிழப்பு


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14,016 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 267 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 25,895 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 1,49,927 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட 14,016 பேரில் ஒருவர் பஹ்ரைன் நாட்டை சேர்ந்தவர். அதே போல மற்றொருவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 23,53,721 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் சென்னையில் 935 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 1895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 1323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் (855), திருப்பூர் (820), தஞ்சாவூர் (615) மற்றும் செங்கல்பட்டு (563) ஆகிய மாவட்டங்கள் மாநில அளவில் நோய் தொற்று பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
7,839 ஆண்களும், 6,177 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Author: sivapriya