இன்றைய ராசி பலன் – 14-06-2021

மேஷம்:

Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைக்கும் விஷயங்கள் நேர்மறையான விஷயங்களாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்போர் அனுகூலமான பலன்களை பெறுவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் பெருகும் வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்:

Rishabam Rasi

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவரையும் எடை போடும் முன் சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடின உழைப்பு தேவைப்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்:

midhunam

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முடிவுகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. உடன் இருப்பவர்களே உங்களை எதிரியாக பார்க்கும் சூழ்நிலை ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் அமையும்.

கடகம்:

Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய இரக்க குணத்தால் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நினைத்த அளவிற்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும்.

சிம்மம்:

simmam

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் தீர கூடிய வாய்ப்புகள் அமையும். எதையும் வெளிப்படையாக கேட்டு விடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும்.

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். உங்கள் மனதில் உள்ள ரகசியங்களை எல்லாம் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புது புது வாய்ப்புகள் இல்லம் தேடி வரலாம். ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்:

Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவது நல்லது அல்ல. ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயலாற்றுவதே உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் தொகைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் தொடர்பான வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்:

virichigam

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய எதிர்பார்ப்பது மீறிய சில விஷயங்கள் நடைபெறலாம். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனக்கசப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது உத்தமம். கணவன் மனைவி அன்பு சீராக இருக்கும்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் யார் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீண்டநாள் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும்.

மகரம்:

Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது உத்தமம். புதிய மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் நவீன உபகரணங்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இனம் புரியாத குழப்பங்கள் நீடிக்கும்.

கும்பம்:

Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலவீனத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சூடு பிடிக்கத் துவங்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு எரிச்சலை ஊட்டும் வகையில் அமையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

மீனம்:

meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத மாற்றங்களால் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு குறையும். மூத்த நபர்களின் அறிவுரை கேட்டு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் லாபம் வரும். கணவன் மனைவிக்குள் இருக்கும் வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. விட்டுக் கொடுத்து சென்றால் மன அமைதி கிடைக்கும்.

Author: admin