பாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.

தற்பொழுது நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரித்ததை தொடர்ந்து, வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க நேரிடும் என வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெரும் பிரச்சினை இருக்கும் போது அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது, இந்த நடவடிக்கை காரணமாக சகல பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது,

ஒருவருடத்திற்கு முன்னர் தேங்காய் எண்ணெய் 20லிட்டர் 4800 ரூபாவிற்கு விற்கப்பட்டது , தற்பொழுது 13500 ரூபா, தற்பொழுது எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளதால், வெதுப்பகங்கள் தமது உணவுகளின் விலைகளை அதிகரிப்பார்கள் என தெரிவித்துள்ளார்

இதன் அடிப்படையில் இன்று முதல் பாண், பணிஸ் மற்றும் வெதுப்பக உணவுகளின் விலைகளை அதிகரிப்பை தவிர்க்கமுடியாது என தெரிவித்துள்ளார்.

Author: admin