ஆயுதத்துடன் இலங்கை குழு ஊடுருவல்.

Read Time:1 Minute, 2 Second

ஆயுதங்களுடன் குழு ஒன்று படகு மூலம் இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்றதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது,

கடந்த சனிக்கிழமை இந்திய மத்திய உளவுத்துறை தமிழகத்துக்கு எச்சரித்துள்ளதாக தகவல் தெரியவருகிறது,படகில் இருந்தவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்த்தவர்கள்? என சரியாக தெரியவில்லை என்றும் படகு ராமேஸ்வரம் நோக்கி சென்றதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய பிரதேசங்களில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Author: admin