இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: இரட்டை தலைமை, சசிகலா ஆடியோ குறித்து விவாதிக்க வாய்ப்பு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர் மற்றும் கொறடா தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக மூத்த நிர்வாகிகள் இடையே இப்பதவிகளை பெறுவதில் கடும் போட்டி நிலவுவதால் இது குறித்து ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இரட்டைத் தலைமை முறையில் உள்ள சிக்கல்கள், அதிமுகவினருடன் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் இன்றைய கூட்டம் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author: sivapriya