தென்காசி விஎச்பி., பஜ்ரங்தள் சார்பில் எளியோர்க்கு உதவிகள்!

tenkasi vhp helping
tenkasi vhp helping

தென்காசி மாவட்டம் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பாக சீன கொரோனா வைரஸின் 2 வது அலையின் போதும், சிரமப்படும் மக்களுக்கு அரிசி உணவு தானியங்கள் பருப்புகள் என உதவிகள் வழங்கப் பட்டன.

உணவுக்காக சிரமப் படுபவர்கள், நோய் தொற்றினால் பாதிக்க ப்பட்டவர்கள் என்று மக்களைத் தேடி அவர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் உதவிகள் செய்து வருகின்றனர். இந்த வகையில், கடந்த 22 நாட்களாக, தொடர்ந்து சாலையோரம், மற்றும் ஆதரவற்ற, தனியாக வசிக்ககூடிய மக்களுக்கு மதிய உணவு சுமார் 2000 பேருக்கும், இரவு உணவு 2000 பேருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் 1000 லிட்டர்கள் கபசுரக்குடிநீர் தயாரிக்கப்பட்டு தொண்டர்கள்‌ மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது

tenkasi vhp help
tenkasi vhp help

கொரோனா பாதித்த நபர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஆயுஷ் – 64 மருந்துகளும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காவல்துறை, துப்புரவு பணியாளர்களுக்கு சத்தான பயிறு வகைகளும் வழங்கப் பட்டது

மேலும் எளிமையில் இருக்கும் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்களும் இன்று வழங்கப்பட்டது

இந்த உதவிகளை முன்னாள் கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியன், வி.ஹெச்.பி மாவட்ட இணைச்செயலாளர் தளவாய், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சபரிமணி, வி.ஹெச்.பி நகர தலைவர் சுப்பிரமணியன், பஜ்ரங்தள் நகர அமைப்பாளர் வைரமுத்து, நாகேந்திரன் விக்னேஷ் மணிகண்டன் தங்கராஜ் சத்தியமூர்த்தி குமார், ‘கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்

Author: admin