ரயில்கள் நேரம் மாற்றம்! தெற்கு ரயில்வே!

train
train

சென்னை எழும்பூர் – மன்னார்குடி, கொல்லம் உட்பட 46 ரயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு ரயில்களின் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புறப்பாடு, வருகை மற்றும் இடையில் வரும் ரயில் நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 17-ம் தேதி முதல் மன்னார்குடி – சென்னை எழும்பூர் ரயில் (06180) நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு இனி இரவு 10.53-க்கு வரும். காரைக்கால் – எர்ணாகுளம் ரயில் (06187) நாகூருக்கு மாலை 4.48 மணிக்கு வரும்.

இதேபோல, புனலூர் – மதுரை (06730), சென்னை எழும்பூர் – கொல்லம் (06101), நாகர்கோவில் – கோயம்புத்தூர் (06321/06322), விழுப்புரம் – மதுரை (02867), நாகர்கோவில் – கோயம்புத்தூர் (02667), சென்னைஎழும்பூர் – புதுச்சேரி (06025/06026) உட்பட மொத்தம் 46 சிறப்பு ரயில்களில் இடைப்பட்ட சில ரயில் நிலையங்களில் புறப்பாடு அல்லது வருகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான ரயில்களில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Author: admin