48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமா? ஒரு முறை இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்களேன்!

நாம் விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்ற நேர்மறை எண்ணம் ஒன்றே போதும், நாம் விரும்பியதை கொண்டு வந்து நம்முடைய கையில் சேர்த்துவிடும். உங்களுடைய மனது எதை விரும்பினாலும் சரி, நல்ல வேலை, நிறைய பணம், இனிமையான இல்லறம், அழகான குழந்தை, நல்ல கணவன் வேண்டும், நல்ல மனைவி வேண்டும், விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், பிரிந்த உறவுகள் ஒன்று சேர வேண்டும் என்று உங்களுடைய மனதில் எதை நினைத்துக் கொண்டிருந்தாலும், அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதுவும் 48 மணி நேரத்தில் இருந்து ஏழு நாட்களுக்குள். அது எப்படி என்பதைப் பற்றிய ஒரு பரிகார முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

water

நாம் வாழும் இந்த உலகம் பஞ்சபூதங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அந்த பஞ்சபூதங்களில் அதிக சக்தி வாய்ந்ததுமான, தினம் தினம் நாம் உயிர்வாழ பயன்படுத்தக்கூடியதுமான தண்ணீரை வைத்துதான் இன்றைக்கு ஒரு பரிகாரத்தை நாம் பார்க்கப் போகின்றோம். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதற்கு முன்பும் சரி, செய்த பின்பும் சரி இதை நீங்கள் செய்தீர்கள் என்று வெளி ஆட்களுக்கு சொல்லவே கூடாது.

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக பல் தேய்த்து விட்டு முகம் கழுவிவிட்டு காலைக்கடன்களை முடித்துவிட்டு ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது உள்ளங் கைகளில் அந்த டம்ளரை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களுக்கு எந்த ஆசை நிறைவேற வேண்டுமோ, அந்த ஆசையை அந்த தண்ணீரிடம் சொல்லுங்கள். அந்த தண்ணீர் ஒன்றே, உங்கள் ஆசையை நிறைவேற்றி விடும் என்ற நினைப்போடு பருகிவிட வேண்டும்.

water1

எப்போது நீங்கள் தண்ணீர் குடித்தாலும், எந்த நேரத்தில் எந்த இடத்தில் தண்ணீர் குடித்தாலும் நீங்கள் விரும்பிய வேண்டுதலை நினைத்து தண்ணீரை பருகி வர வேண்டும். இது போதும். உங்களுடைய ஆசை, வேண்டுதல் இரண்டே நாட்களில் நிறைவேறுவதற்கான வேலையை இந்த பிரபஞ்சம் பார்த்துக்கொள்ளும். நீங்கள் விரும்பிய வேலையாக இருந்தாலும் சரி, விரும்பிய பணமாக இருந்தாலும் சரி, விரும்பிய நபராக இருந்தாலும் சரி, ஏழு நாட்களுக்குள் உங்களை வந்து அடைவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.

இந்த தண்ணீருக்கு எப்போதுமே நேர்மறை ஆற்றலை கிரகித்துக் கொள்ளக் கூடிய தன்மை உண்டு. நீங்கள் அந்த தண்ணீரிடம் சொல்லும் உங்களுடைய ஆசையே அந்த தண்ணீர் விரைவாக கிரகித்துக்கொள்ளும். அதன்பின்பு அந்த தண்ணீரை மீண்டும் நீங்கள் குடிக்கும் போது, உங்களுடைய வேண்டுதலுக்கு சக்தி இரட்டிப்பாகி உங்கள் உள்ளே வந்துவிடும். ஆன்மிக ரீதியாக இதை சொல்ல வேண்டுமென்றால், தீர்த்தத்தை குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற மனிதர்களுடைய நம்பிக்கையும் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

water

முழுக்க முழுக்க உங்களுடைய விடாமுயற்சியில் எந்த ஒரு பின்னடைவும் இருக்கக்கூடாது. முழுக்க முழுக்க உங்களுடைய நம்பிக்கையில் ஒரு துளி அளவும் சந்தேகம் இருக்கக் கூடாது. இதை மட்டும் ஏழு நாட்கள் செய்து உங்களுடைய விருப்பத்தில், ஏதேனும் முன்னேற்றம் தெரிந்தால், நீங்கள் நினைத்ததை அடைய கூடிய விஷயங்கள் படிப்படியாக நடக்கத் தொடங்கினால், இந்த பரிகாரம் செய்வதை விடவே விடாதீர்கள். அப்படியே பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அந்த ஆசை கூடிய விரைவில் நிறைவேறிவிடும். (ஒரு குறிப்பிட்ட ஆசை நிறைவேறும் வரை, அந்த ஆசையை மட்டுமே நினைத்து தண்ணீர் பருக வேண்டும்.)

water drink

ஒருவேளை நீங்கள் நினைத்த காரியத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றால், உங்களுடைய நம்பிக்கையில் குறைபாடு உள்ளது என்றுதான் அர்த்தம். மேலும் நம்பிக்கையை வலுவூட்டி கொண்டு மீண்டும் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுடைய நிறைவேறாத எண்ணங்கள், நிறைவேறாத ஆசைகள் நிறைவேற தொடங்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Author: admin