பணமிருந்தும் சில வீடுகளில் பஞ்சம் இருக்கும். பணம் இருக்கும் வீட்டில் பஞ்சம் இருப்பதை எப்படி அறிவது? அதை எப்படி சரிசெய்வது? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

பணம் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் எந்த ஒரு தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாது. பணம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் மதிக்கப்படுவது கிடையாது. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், ஒரு வீடு பணத்தால் நிரம்பி வழிந்தால் மட்டும் போதுமா? அந்த வீட்டில் பஞ்சம் இல்லாமல் இருந்துவிட முடியுமா? என்று ஒரு கேள்வியை எழுப்பினால், அந்த கேள்வி உண்மையிலேயே கேள்விக்குறியாக தான் இருக்கும். காரணம் ஒரு வீட்டில் காசு பணம் இருக்கும். செல்வ செழிப்பு இருக்கும். அந்த வீட்டு சமையலறையில் அரிசி பருப்பு தன தானியங்கள் நிறைந்திருக்கும்.

arisi1

ஆனாலும் அந்த வீட்டில் உள்ளவர்கள் அந்த சாப்பாட்டை நிறைவாக சாப்பிட முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். சமையலறையில் சமையலுக்கு தேவையான அத்தனை பொருட்கள் நிரம்பி வழியும் போதும், அந்த வீட்டிலுள்ளவர்கள் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு அனுபவிக்க முடியவில்லை. இதற்கு பெயரும் பஞ்சம் தான். இந்த நிலைமை உங்கள் வீட்டில் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டில் இருக்கும் தன தானியங்களை சாப்பிட்டு உங்களால் அனுபவிக்க முடியவில்லை. எத்தனையோ ஏழை மக்கள் சாப்பிடுவதற்கு வழி இல்லாமல் அரிசி பருப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் தானியங்களில் ஒரு பகுதியை தானமாக கொடுக்க வேண்டும். ஒருமுறை அல்ல. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ தொடர்ந்து இந்த தானத்தை செய்து வர வேண்டும்.

Annapoorani

சாப்பிட முடிந்தவர்களுக்கு பசியாற சாப்பாடு போட வேண்டும். அடுத்தபடியாக உங்களுடைய வீட்டு அரிசி பானையில் அல்லது அரிசி போட்டு வைத்திருக்கும் டப்பா, அரிசி மூட்டை எதுவாக இருந்தாலும் சரி அதில் அன்னபூரணியின் சிலையை வைக்க வேண்டும். குறிப்பாக அந்த அன்னபூரணி சிலை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அந்த சிலைக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, ஒரு சிவப்பு நிற துணியை அந்த அன்னபூரணி தாய்க்கு அணிவித்து, மஞ்சள் வைத்து அதன் மேல் சிவப்பு நிறத்தில் குங்குமப் பொட்டு வைத்து அதன் பின்பு அந்த சிலையை எடுத்து அரிசி மூட்டையில் புதைத்து வைக்க வேண்டும். இது உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரிய வேண்டும்.

வீட்டு உறுப்பினர்கள் அல்லாமல் வெளி ஆட்களுக்கு நீங்கள் வைத்திருக்கும் சிலை எக்காரணத்தைக் கொண்டும் தெரியவே கூடாது. அதாவது இந்த விஷயத்தை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்களால் சிலை வைக்க முடியவில்லை என்றாலும் அன்னபூரணி தாயார் சிவப்பு நிறத்தில் உடை அணிந்திருப்பது போல சிறிய அட்டைப் படத்தில் உள்ள புகைப்படம் கிடைத்தாலும் அதை நீங்கள் எடுத்து உங்களுடைய அரிசிப் பானையில் மறைத்து புதைத்து வைக்கலாம்.

annapurna

இதை செய்தால் உங்களுக்கு அந்த அன்ன தோஷம் நீங்கும். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட முடியாத சூழ்நிலை, மனக்கஷ்டம் இருப்பதால் சாப்பிட முடியாத சூழ்நிலை ஏதோ ஒரு காரணம் இருக்கும். நீங்களே சிந்தித்துப் பார்த்தால் தெரியும். உங்களுடைய வீட்டில் எல்லாம் இருக்கின்றது. ஆனால் ஒரு பிடி சாப்பாட்டை நிம்மதியாக சாப்பிட முடியவில்லை இந்த பஞ்சத்தை நீக்குவதற்கு, மேல் சொன்ன பரிகாரத்தைச் செய்தாலே போதும். நிச்சயமாக உங்களுடைய வீட்டில் நல்ல மாற்றம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Author: admin