+1 மாணவர் சேர்க்கை தொடங்கியது: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன்

தமிழகத்தில் பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது.

கொரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொருநாளும் குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து சேர்க்கை நடத்த அந்தந்த பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. முதலில் அந்தந்த பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி படித்தவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதன் பிறகு மற்ற பள்ளிகளில் இருந்து வருவோருக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை முழுவதும் முடிந்தபிறகு பிற வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அவர்களின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

Author: admin