நீண்ட நாட்களாக பயன்படுத்தாத எவர்சில்வர், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களுக்கு உள்ளே வரும் ஒரு கெட்ட வாடையை சுலபமாக நீக்க சூப்பர் ஐடியா!

கடந்த சில நாட்களாக பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், அனைத்தும் விடுமுறை. நம்முடைய வீட்டில் வாட்டர் கேன்களின் பயன்பாடு குறைவாகவே இருக்கும். பயன்படுத்தாத வாட்டர் கேன்களை மூடிபோட்டு பத்திரப்படுத்தி வைத்து இருப்போம். ஆனால் அந்த வாட்டர் கேன்களை எடுத்து மீண்டும் பயன்படுத்தும் போது, மூடிய வாட்டர் கேன் உள்ளே இருந்து ஒரு விதமான கெட்ட வாடை வீசும். புதியதாக வாங்கிய வாட்டர் கேன்களை சுத்தம் செய்யவும் இந்த டிப்ஸ் உபயோகமானதாக இருக்கும். இதை சரிசெய்ய ஒரு சூப்பரான சுலபமான டிப்ஸ். இதோடு சேர்த்து இன்னும் சில சமையலறை குறிப்புகளையும் தெரிந்து கொள்வோம்.

waterbottle1

சில்வர் வாட்டர் கேன் ஆக இருந்தாலும் சரி, பிளாஸ்டிக் வாட்டர் கேன் ஆக இருந்தாலும் சரி, அதனுள்ளே பல் துலக்கும் பேஸ்ட்டை லேசாக தடவி விட்டு தண்ணீர் ஊற்றி வாட்டர் கேன்களை சுத்தம் செய்யும் பிரஷால் தேய்த்து, நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி அலசி கீழே ஊற்றி விடுங்கள். அதன் பின்பு அந்த வாட்டர் கேன்களை வெயிலில் காய வைத்து பயன்படுத்தினால் எந்த ஒரு கெட்ட வாடையும் வீசாது. ட்ரை பண்ணி பாருங்க. மக்கள் லிக்விட் களை பயன்படுத்தி கழுவுவதை விட, பேச்சை பயன்படுத்தி கழுவினால் நல்ல வித்தியாசம் தெரியும். பிளாஸ்க் கையும் இது ஐடியாவை வைத்து சுத்தம் செய்து கொள்ளலாம்.

முட்டைக்கோசை சமைக்கும்போது சில பேருக்கு அதில் இருந்து வெளிவரக்கூடிய ஒரு விதமான வாடை பிடிக்காது. முட்டையிலிருந்து வரும் வாடையை நீக்க முட்டைக்கோசை சமைக்கும்போது அதில் சிறிய துண்டு பிரியாணி இலையை சேர்த்து சமைத்து பாருங்கள்.

வெண்டைக்காயை கழுவி வெட்டும்போது கத்தியில் நூல் நூலாக கொழகொழவென ஒட்டிக்கொள்ளும். இப்படி வெண்டைக்காயை வெட்டினால் வெண்டைக்காய் பொரியல் உதிரி உதிரியாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வராது. வெண்டைக்காயை வெட்டும் கத்தியில் சிறிதளவு எலுமிச்சை சாறை தடவி பின்பு, வெண்டைக்காயை வெட்டி பாருங்கள். நூல் நூலாக கொழகொழவென வராமல் இருக்கும். வெண்டைக்காய் பொரியல் செய்யும் போதும் அதில் ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸை சேர்த்து கொள்ளலாம்.

பச்சைப் பட்டாணியை வேக வைத்த பின்பு அதனுடைய பச்சை நிறம் மங்கத் தொடங்கி விடும். பச்சைப் பட்டாணியை வேக வைக்கும்போது அதில் அரை ஸ்பூன் சர்க்கரையை சேர்த்துக் கொண்டால், பச்சை நிறம் மாறாமல் பிரஷ்ஷான பச்சைக் கலரில் கிடைக்கும்.

poori_1

பூரியை திரட்டி வைத்து அதை ஒரு அகலமான தட்டில் மூன்று அல்லது நான்கு என்ற கணக்கில் வைத்து ஃப்ரிட்ஜில் ஒரு பத்து நிமிடங்கள் வைத்து எடுங்கள். அதன் பின்பு அந்தப் பூரியை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், பூரி உப்பி வரும். நீண்ட நேரத்திற்கு பூரி அமுங்காமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அதேசமயம் எண்ணெய் குடிக்காமலும் பூரியை பொரித்து எடுக்கலாம். திரட்டிய பூரியை ஃப்ரிட்ஜில் வைப்பது கொஞ்சம் சிரமம் தான். இருந்தாலும் மூன்று அல்லது நான்கு பூரிகளை வைத்து ட்ரை பண்ணி பாருங்க.

anjaraipetti

பிரிட்ஜில் ஸ்டோர் செய்யும் கருவேப்பிலை கொத்தமல்லி தழை புதினா பச்சை மிளகாய் இவைகளுக்கு தனித்தனியாக கவர் அல்லது டப்பாக்களை பயன்படுத்தி சிரமப்படுவதை விட, பிளாஸ்டிக்கில் இருக்கும் அஞ்சரை பெட்டி போல ஒரே டப்பாவை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் தனித்தனி டப்பாக்களில் இந்த பொருட்களை சேகரித்து வைத்துக் கொண்டால், ஒரே டப்பாவை எடுத்து தாளிப்பதற்கு சுலபமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

Author: admin