விசேடமான விமானத்தில் அமெரிக்கா செல்லும் சூப்பர் ஸ்டார்.

விசேடமான தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கோரிய சூப்பர் ஸ்டார் ரஜினி மத்திய அரசில் உள்ள தமிழ் அமைச்சருடன் தொலைபேசியில் கதைத்துள்ளார்.

மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் 14 இருக்கைகள் கொண்ட இவ் விசேட தனி விமானத்தில் தன்னுடன் தனது குடும்பத்தாரையும் அமெரிக்கா அழத்துச் செல்லவதாகவும், மருத்துவ சிகிச்சைக்காகவே இப் பயணம் மேற்கொள்வதாகவும் சிறிதுகாலம் அங்கு ஓய்வெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட் காலம் என்பதாலேயே விசேடமான தனி விமானப் பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Author: admin