உபி அரசின் அசத்தல் திட்டம்! பயனை அனுபவிக்கும் முதியோர் வட்டம்!

old-man
old-man

வயது முதிர்ந்தவர்களுக்கு உதவி புரியவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் உத்திரப் பிரதேச அரசு அறிமுகப்படுத்திய ‘Elderline’ திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மனநல, உடல்நல மற்றும் சட்ட ரீதியான உதவிகள் தேவைப்படும் முதியவர்களுக்கு உதவ தொடங்கப்பட்ட இந்த திட்டம் உத்திரபிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

14567 என்ற எண்ணில் இயங்கும் இந்த கட்டணமில்லா சேவையை ஒரு நாளில் 80 முதல் 90 முதியவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மே 14 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

இந்தியாவிலேயே முதன்முதலாக முதியவர்களுக்கு உதவ என்று இந்த சேவையை அறிமுகப்படுத்திய மாநிலம் உத்திரப்பிரதேசம் தான்.

மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்துடன் இணைந்து உத்தரப்பிரதேச அரசு இந்த சேவையை செயல்படுத்தி வருகிறது.

முதியோர் இல்லங்கள் பிசியோதெரபி மருத்துவமனைகள் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் சட்ட ரீதியான பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் இந்த சேவை மூலம் உடனடி தீர்வு வழங்கப்படுகிறது.

Elderline என்ற இந்த சேவையை செயல்படுத்துவதில் டாடா அறக்கட்டளை மற்றும் NSE அறக்கட்டளை இணைந்து உதவி புரிகின்றன.

கஸ்கஞ்ச் மாவட்டத்தில் 70 வயதான மூதாட்டி உணவின்றி தவித்த நிலையில், அங்கிருந்த சிலர் Elderline சேவையை அழைத்து தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று உள்ளூர் காவலர்கள் மற்றும் தாசில்தார் ஆகியோருடைய உதவியுடன் அந்த மூதாட்டியை முதியோர் காப்பகம் ஒன்றில் சேர்த்துள்ளனர்.

அதைப் போன்று ஊரடங்கு காரணமாக பேருந்து நிலையத்தில் மாட்டிக்கொண்டு ஒன்றரை மாதங்களாக தவித்து வந்த 70 வயதான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவருக்கும் அவர் வீடு போய் சேர உதவி செய்துள்ளனர்.

உத்தரகண்டில் இருந்து தனது மகனை பார்ப்பதற்காக அவர் உத்தரப்பிரதேசம் வந்ததாகவும் ஆனால் அவரது மகள் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து விட்டதால் அவர் பேருந்து நிலையத்தில் இருந்ததாகவும் தெரியவந்த நிலையில் Elderline குழுவினர் அவர் உத்தரகண்டில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல ஆவன செய்து, உணவு வாங்கிக் கொடுத்து உதவியுள்ளனர்.

இந்த சேவை பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தற்போது ஒரு நாளைக்கு 80 முதல் 90 வரை அழைப்புகள் வருவதாகவும் கூறப்படுகிறது.

Author: admin