பயணத்தடையை தொடர்வதா? தளர்த்துவதா?

நாட்டில் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பயணத்தடையால் கொரோனா தொற்றுகளும் மரணங்களும் குறைவடைந்து இருந்தாலும் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டியுள்ளார்,

விசேட வைத்திய நிபுணர்கள் எடுக்கும் தீர்மானங்களை பொறுத்தே, நடைமுறையில் உள்ள பயணத்தடையை தொடர்வதா?, தளர்த்துவதா? என தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பயணத்தடை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானம் தற்போதைக்கு உள்ளதாகவும், இது தொடர்பில் வைத்திய நிபுணர்களுடன் தொடர்ந்து ஆராய்ந்த்துவருவதாகவும், விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களின் ஒத்துழைப்பையும் வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.

Author: admin