“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்

கொரோனா தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டினாலும் மக்கள் முகக்கவசம் அணிவதை நிறுத்தக் கூடாது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி அரசு கொரோனா மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் சுமார் இருபது லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 1,094 பேரில் 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

இன்று கூடவிருக்கும் நீட் கமிட்டி, ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையை அளிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Author: sivapriya