‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு 25கோடி ரசிகர்களா?

பாடகி தீ மற்றும் பாடகர் தெருக்குரல் அறிவு பாட, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இண்டிபென்டெண்ட் ஆல்பம் தான் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்.

சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர். ரஹமான் அறிமுகப்படுத்திய “மாஜா” youtube தளத்தில் வெளியாகி பிரபலம் அடைந்தது.

இப் பாடல் நிலத்தை இழந்த பூர்விக குடிமக்களை மையப்படுத்தி எழுதப்படுள்ளது இப்பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்ததுடன் முணுமுணுக்கவும் வைத்தது.

இப்பாடல் வெளியாகி 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில் youtube இல் 25 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

Author: admin