யூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை!

utube madhan
utube madhan

யூ – டியூபில் மிகவும் பிரபலமான மதன் நேரில் ஆஜராகுமாறு புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டாலும் ப்ரீ பையர் போன்ற வேறு பெயர்களில் இன்னும் அத்தகைய விளையாட்டுகள் இணையதளத்தில் உலா வந்து கொண்டு இருக்கின்றன.

பப்ஜி விளையாட்டு எப்படி விளையாடினாள் வெற்றி பெறுவது என்பது பற்றி ட்ரிக்ஸ் சொல்லி தரும் சேனலாக தொடங்கப்பட்ட மதன் ட்ரிக்ஸ் சேனல் என்ற யூ டியூப் சேனல் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் போக போக ஆபாச பேச்சும் பெண்களை இழிவுப்படுத்தும் பேச்சுகளும் இந்த சேனலில் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

madhan
madhan

பெண்களை தனது ஆபாச சேட்டிங்கால் கவர்ந்து, இச்சைகளை தீர்த்துக் கொண்டதாக எழுந்த புகாரால் யூடியூபர் மதன் என்பவன் போலீசாரின் பார்வையில் சிக்கியுள்ளான்.

பப்ஜியை யூடியூபில் ஸ்டீரிம் செய்து பெண்களுடன் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரச் செய்து நிர்வாண புகைப்படங்களையும், வீடியோ கால்களையும் செய்து பலரின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், பேடிஎம், கூகுள் பே உள்ளிட்டவற்றின் மூலம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வழிகளில் ஆயிரக்கணக்கிலான ரூபாயை சம்பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

யூ டியூப் மதன் ஆன்லைன் விளையாட்டின் போது கெட்ட வார்த்தை பேசிய வீடியோக்கள், பெண்களை பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோக்கள், மற்ற பெண்களுடன் தனியாக ஆபாசமாக பேசிய வீடியோக்கள் என அனைத்தும் தற்பொழுது சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இணையத்தில் ஆபாசமாக பேசி வரும் பப்ஜி மதனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது மதன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மதனின் யூடியுப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Author: admin