இந்த வார ராசிபலன் 14-06-2021 முதல் 20-06-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

மேஷம்:

Aries zodiac sign

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். சில பேருக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. சில சந்தோஷமான செய்திகள் தொலைபேசியின் மூலம் உங்கள் செவிகளை வந்து சேரும். நீண்ட நாட்களாக செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த காரியத்தை சரியாக திட்டமிட்டு இந்த வாரம் முடித்து விடுவீர்கள். சொந்தத் தொழில் நல்ல முன்னேற்றத்தை பெறும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:

Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமையை பொறுத்தவரை எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. கை செலவுக்கு தேவையான பணம் வருவதும் போவதுமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களில் யாரிடமும் ஈடுபட வேண்டாம். இந்த வாரம் முழுவதும் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சனை என்று வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:

Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைவான வாரமாக இருக்கப்போகின்றது. செய்யும் வேலையில் மனதிருப்தி அடைவீர்கள். எதிரி தொல்லைகள் நீங்கும். நீண்ட நாள் கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக சஞ்சலம் கொடுத்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறையத் தொடங்கும். எதையோ சாதித்தது போல எல்லா கஷ்டங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு, சந்தோஷமாக இருப்பீர்கள். நிம்மதியான தூக்கம் கிடைக்க போகின்றது. சொத்துசுகம் வாங்குவதற்கு இந்த வாரம் முயற்சி செய்யலாம். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:

zodiac sign

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் குறைந்து, அன்னியோன்னியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும். உங்களை எரிச்சல் மூட்ட வேண்டும் என்பதற்காகவே, சில வேலைகளை, சிலர் செய்வார்கள். இருப்பினும் அதைப் பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம். அந்த கடவுள் உங்கள் பக்கம். நீங்கள் அடுத்தவர்களுக்கு நல்லது மட்டுமே நினைக்கும் வரை உங்களை ஜெயிக்க யாராலும் முடியாது. மடியில் கனமில்லையேல் வழியில் பயம் தேவையில்லை. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:

Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். நீங்கள் எடுத்த முயற்சிகள் நிச்சயமாக படிப்படியாக வெற்றியை அடையும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகளை தொடங்குவதற்கு இது நல்ல வாய்ப்பு. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். அந்த உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக சில விஷயங்களை செய்து கொடுப்பார்கள். சொந்த தொழிலை கடன் வாங்கி விரிவுபடுத்தலாம். அதிக வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:

Virgo zodiac sign

கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். அனாவசியமாக உங்கள் குடும்ப விஷயங்களை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களை உயர் அதிகாரிகளை எதிர்த்து பேசுவது கூடவே கூடாது. பிரச்சனைகள் வரும் பட்சத்திலும் அனுசரித்து தான் செல்ல வேண்டும். வேலையை விட்டுவிட வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் புதிய வேலை கிடைப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம். வியாபாரமும் சற்று மந்தமாகத்தான் செல்லும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்யும் பட்சத்தில் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

துலாம்:

Libra zodiac sign

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கஷ்டமான வாரமாக தான் நகர்ந்து செல்ல போகின்றது. நிதி பற்றாக்குறை ஏற்படும். தேவையற்ற விஷயங்களுக்கு கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உண்டாகும். கடன் வாங்கினாலும் பணப்பற்றாக்குறை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மன சஞ்சலங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இதயத்தில் எந்த பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் வேலைப்பளு அதிகமாக தான் இருக்கும். சொந்த தொழில் சுமுகமாக செல்லும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:

Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்ட காற்று வீச போகின்றது. உங்களை ஏளனமாகப் பேசியவர்கள் கூட உங்களின் நல்ல மனதை புரிந்து கொள்வார்கள். நீங்கள் செய்யும் சில வேலைகள் அடுத்தவர்கள் பாராட்டும்படி அமையும். பாராட்டு மழையில் நனைய தான் போகிறீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த ஒரு காரியம் வெற்றி அடையும். அதன் மூலம் அதிக லாபத்தைப் பெறுவீர்கள். மனநிறைவு சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தோடு குல தெய்வத்தை வழிபாடு செய்ய மறக்க வேண்டாம்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் உஷாராக இருக்க வேண்டும். யாரை நம்பியும் எதற்கும் வாக்கு கொடுக்கக்கூடாது. யாரை நம்பியும் பண பரிமாற்றத்தில் தலையிடக்கூடாது. ஜாமீன் கையெழுத்துப் போடக்கூடாது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை என்று வரும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். தேவையற்ற கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்கு தெரியாத எதிரிகளாலும் பிரச்சனைகள் இருக்கும். இருப்பினும் இந்த வார இறுதியில் எல்லா பிரச்சனையும் சுமூகமாக முடியும். கவலை வேண்டாம். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

Capricornus zodiac sign

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் தோல்வி அடைந்த விஷயங்களை மீண்டும் முயற்சி செய்து வெற்றி காண்பீர்கள். உங்களை தரக்குறைவாக பேசியவர்களின் முன்னால் தலை நிமிர்ந்து நடக்கும் காலம் வந்துவிட்டது. கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையும். மேலும் மேலும் நீங்கள் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. கணவன்-மனைவிக்கிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டு உண்டு. தேவையற்ற அலைச்சல்கள் வரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். மகான்களின் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:

Aquarius zodiac sign

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனநிறைவான வாரமாக தான் இருக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சொத்து சுகங்கள் வாங்கக்கூடிய யோகங்கள் தேடிவரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் உங்களுடைய பணியில் அதிக கவனம் தேவை. கவனக்குறைவு பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். உங்களுடைய பொருட்களை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை நம்பி கொடுக்கும் பட்சத்தில் ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:

Pisces zodiac sign

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. எந்த முடிவை, எந்த நேரத்தில் எடுப்பது என்று தெரியாமல் சில மன சஞ்சலங்கள் உண்டாகும். வேலையில் சிக்கல்கள், குடும்பத்தில் பிரச்சனை என்று சில சங்கடங்கள் இருக்கும். இருப்பினும் நீங்கள் பொறுமை காப்பது நல்லது. எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். அவசரப்படாதீர்கள். கோபப்படாதீர்கள். பொறுமை மட்டுமே இந்த வாரம் தேவை. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

The post இந்த வார ராசிபலன் 14-06-2021 முதல் 20-06-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Author: admin