ஆனி மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

பிலவ வருடத்தில் வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் நாளை செவ்வாய் கிழமையில் துவங்க இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் துவங்கும் பொழுது ஒவ்வொரு கிரகங்களின் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் பலன்கள் மாறக்கூடும். வைகாசி மாதத்தில் தீராத துன்பங்களை சந்தித்து வந்த சில ராசியினர் ஆனியில் நற்பலன்களைப் பெற இருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ராசியினருக்கும் உரிய பலன்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மேஷம்:

Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. உங்கள் ராசியிலிருந்து மிதுன ராசியான மூன்றாம் ராசியில் சூரியன் பயணம் செய்வதால் வேலை ரீதியான விஷயங்களில் எதிர்பாராத அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ந்து பொருளாதாரம் சீர்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட சில விஷயங்கள் தடையில்லாமல் நிறைவேறும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. இம்மாதம் குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். ராசிநாதனுடன், சுக்கிர சேர்க்கையால் மனக்கவலைகள் அகன்று இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். எந்த ஒரு முடிவையும் தைரியமாக எடுக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்:

Rishabam Rasi

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் இடமாக இருக்கும் மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் வேலை தொடர்பான விஷயங்களில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற விஷயங்களில் சாதகப் பலன்கள் கிடைக்கும். பணியில் உங்கள் கை ஓங்கி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வேலை பளு, கூடுதல் பொறுப்புகள் போன்றவற்றின் மூலம் மன உளைச்சல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்:

midhunam

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வளர்ச்சியை காண்பீர்கள். எதிலும் வெற்றியும், முன்னேற்றமும் சிறப்பாக அமையும். தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற, இறக்கங்களில் முன்னேற்றம் இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் உழைப்பு தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் இதனால் சோர்வும், டென்ஷனும் காணப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. ஆரோக்கியம் மேம்பட உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

கடகம்:

Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசியில் இருந்து சூரியன் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏற்ற, இறக்கமான பலன்களை காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். எனினும் அதிக தொகையை ஈடுபடுத்திவதில் கவனம் செலுத்தவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய ஊதியம் கிடைக்கும். நினைத்த விஷயங்கள் நினைத்த நேரத்தில் நடக்கும். சுபகாரிய முயற்சிகள் நல்ல பலன் தரும். தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்க்கவும். பணியிலும், வீட்டிலும் வேலை பளு மற்றும் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் மேம்பட கவனத்துடன் இருப்பது நல்லது.

சிம்மம்:

simmam

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசிநாதன் ஆகிய சூரிய பகவான் லாப ஸ்தானமாகிய பதினோராம் இடத்தில் சஞ்சரிப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் வரக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கப் பெறும். மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியிட பயணங்களில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது.

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசியில் இருந்து பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. இதுவரை மந்த நிலையில் செயல்பட்ட வியாபாரம் சூடுபிடிக்க துவங்கும். புதிய உத்திகளைக் கையாண்டால் முன்னேற்றத்தை அடையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். மருத்துவ ரீதியான வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குலதெய்வ வழிபாடு மேற்கொண்டால் நன்மைகள் நடக்கும்.

துலாம்:

Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பண வரவு திருப்திகரமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் உங்களின் கை ஓங்கியிருக்கும். மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வெளியிடங்களில் உங்களின் மீதும், உடைமையின் மீதும் கவனத்துடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்:

virichigam

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கவனத்துடன் இருக்க வேண்டிய மாதமாக அமைய இருக்கிறது. எதிலும் சாதகமற்ற அமைப்பு என்பதால் வெளியிட போக்குவரத்துகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் கொடுக்கல் வாங்கல் தொடர்பானவற்றை எச்சரிக்கையுடன் கையாளுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும், பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசியில் இருந்து ஏழாம் இடமான மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டு இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். உத்தியோக ரீதியான வெளியிட பயணங்களில் கவனம் தேவை. உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக மேம்படும்.

மகரம்:

Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசியிலிருந்து ஆறாம் இடத்தில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனத்துடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு பணிச்சுமை கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு மேலும் வலுவாக இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருக்கும் பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். தேவையற்ற கடன்களை தவிர்க்கவும்.

கும்பம்:

Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. இந்த ராசியில் இருந்து ஐந்தாம் இடத்தில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் திறமைக்கு உரிய ஊதியம் கிடைக்கும். சக பணியாளர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெளிவட்டார தொடர்புகளை புதிய நட்பு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் எப்பொழுதும் நிறைந்து காணப்படும். உறவினர்களின் ஆதரவு பெருகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உஷ்ண ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்:

meenam

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். பிள்ளைகள் வழியில் சில தொல்லைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் குழப்பங்கள் தீரும். தடைப்பட்ட சில விஷயங்களுக்கு முடிவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். போட்டி பொறாமைகள் குறையும். தேவையற்ற ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது உத்தமம். அனாவசியப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.

Author: admin