இன்றைய ராசி பலன் – 15-06-2021

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முடிவு பிறக்கும் நாளாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர் பார்க்கும் இடத்தில் இருந்து பணம் வரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுங்கள்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சாற்றலால் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனை கொடுத்து வந்த எதிரிகள் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வீர்கள். அவர்கள் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். விக்னேஸ்வரரை வழிபடுங்கள்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கலாம். தேவையற்ற விஷயங்களை சிந்திப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இழுபறியில் இருந்து வந்த சில பணிகள் விரைவாக முடிவுக்கு வரும். உங்களுடைய சுறுசுறுப்பு முன்னேற்றத்தை கொடுக்கும். துர்க்கையை வழிபடுங்கள்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு உரிய கடவுளை வழிபடுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை, பொறுப்புகள் கூடும். சிலருக்கு புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாக வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விஷ்ணு பகவானை வழிபட்டு வாருங்கள்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எளிதாக செய்யும் வேலை கூட சிரமத்துடன் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான போக்குவரத்தின் போது எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதுமைகளை புகுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு தெளிவான சிந்தனையை மேற்கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூல பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். சிவனை வழிபட்டு நன்மை பெறலாம்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. பிள்ளைகள் வழியில் சில தொல்லைகள் வந்து சேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களின் முன்னேற்றத்தை கண்டு புதிய உத்வேகம் பிறக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மூலம் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். எதிலும் முன்னேற முழுமுதற் கடவுளை வழிபடுங்கள்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் மேம்படும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்கள் திறம்பட சமாளிப்பீர்கள். குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கந்தனை வழிபடுங்கள்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் சவால்களை தைரியமாக எதிர்கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் குறையும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு கவனமுடனிருப்பது நல்லது. கணேசனை வழிபடுங்கள்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். உங்களுடைய எதிரிகள் உங்கள் பலவீனத்தை அறிந்து செயல்படுவார்கள் எனவே எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகப் பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அம்பிகையை துதியுங்கள்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தலைகனம் பிடித்து செயல்பட்டால் மன அமைதி சீர்கெடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணி பற்றிய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம். அம்பாளை வழிபடுங்கள்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே தேவையற்ற ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளை அகற்றுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கனவுகள் நனவாக கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வேலனை வழிபடுவது நல்லது.

 

Author: admin