“இந்தியா எளிதாக சாம்பியன் பட்டத்தை வெல்லும்” – ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்


வரும் வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாக உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை எளிதாக வெல்லும் என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன்.
கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த போட்டி குறித்து பல்வேறு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தங்களது பேவரைட் அணிகளை தேர்வு செய்து வருகின்றனர். ஒரு பேட்டியில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளர் குறித்து சொல்லுங்கள் என பெய்னிடம் கேட்டதற்கு சிறிது கூட தயக்கம் இன்றி இந்தியா வெல்லும் என தெரிவித்துள்ளார் அவர்.
“இந்திய அணி கிட்டத்தட்ட அவர்களது சிறப்பான ஆட்டத்தை நெருங்கிய படி விளையாடி விட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை எளிதில் வென்றுவிடும்” என தெரிவித்துள்ளார் பெய்ன். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 2 – 1 என வென்றது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya