உலக அளவில் 17.70 கோடி பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு

உலக அளவில் இதுவரை 17.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

உலக அளவில் 17.70 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 38.27 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 16.11 கோடி பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து உள்ளனர்.

அமெரிக்காவில் புதிதாக ஒரேநாளில் 9,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 198 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை 3.43 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 6.15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் புதிதாக 40,865 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 1.74 கோடி பேருக்கு அங்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 4.88 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒரேநாளில் 928 பேர் உயிரிழந்துள்ளனர்.

Author: sivapriya