ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை மாணாக்கர் சேர்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை அந்தந்த ஆட்சித் தலைவர்களிடம் கோரி நடைமுறைப்படுத்தவேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Author: admin