இந்த ஆனி மாதம் முடிவதற்குள், உங்கள் வீட்டில் ஒரு நல்லது நிச்சயம் நடக்கும். முருகப்பெருமானை இன்று மாலை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்.

கடந்த சில மாதங்களாகவே நம் வீட்டில் ‘ஒரு நல்லது நடந்து விடாதா’, என்ற ஏக்கம் எல்லோரது மனதிலும் இருந்து வருகின்றது. சூழ்நிலை சரி இல்லை. எந்த ஒரு நல்லதையும் நடத்தி பார்க்கும் அளவிற்கு கையில் வருமானமும் இல்லை. போதிய வசதிகளும் நமக்கு கிடைக்கவில்லை. இன்று ஆனி மாதம் முதல் நாள். செவ்வாய்க்கிழமை அன்று பிறந்திருக்கின்றது. இந்த மாதமாவது நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று முருகப் பெருமானை வேண்டிக் கொண்டு இன்று மாலை, உங்களுடைய வீட்டில் இந்த வழிபாட்டினை செய்து பாருங்கள். நிச்சயமாக இந்த மாதம் முடிவதற்குள் நீங்கள் எதிர்பாராத நல்ல செய்தி உங்கள் செவிகளை வந்தடையும்.

முருகப் பெருமானை வேண்டி வீட்டிலிருந்தபடியே ஆறு தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தோமே ஆனால் நிச்சயமாக நாம் வேண்டிய வேண்டுதல் உடனே நிறைவேறும். அந்த தீபங்கள் நெய் தீபமாக இருக்கும் பட்சத்தில் மேலும் சிறப்பு. இன்று உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். முருகப் பெருமானின் திரு உருவ படத்தை நன்றாக துடைத்து மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து கிடைத்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

இன்று மாலை முருகப் பெருமானின் திரு உருவ படத்திற்கு முன்பாக மண் அகல் தீபங்கள் 6 வைத்து, முடிந்தால் அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும். தீபம் கிழக்கு நோக்கித்தான் எரிய வேண்டும். ஆறு தீபங்களை வட்டவடிவமாக வைக்கக்கூடாது. நெய் ஊற்ற முடியாதவர்கள் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. முருகப்பெருமானுக்கு உங்களால் முடிந்த இரண்டு வாழைப் பழமாவது நிவேதனமாக வைத்து விடுங்கள்.

Lord Murugan Vel

பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை மனமுருகி முருகப் பெருமானிடம் முறையிட வேண்டும். பத்து நிமிடங்களாவது கண்களை மூடி முருகப்பெருமானின் நாமத்தை உச்சரித்து, தியானம் செய்ய வேண்டும். அதன்பின்பு கந்த சஷ்டி கவசத்தை உங்கள் வாயார உச்சரித்து படிக்க முடிந்தால் படிக்கலாம். அப்படி இல்லை என்றால் அந்த கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்கவிட்டு உங்களுடைய காதுகளில் கேட்க வேண்டும்.

கந்த சஷ்டி கவசம் முடியும் வரை பூஜை அறையிலேயே அமர்ந்து முருகப் பெருமானை மனதார நினைத்து தியானத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். கந்த சஷ்டி கவசத்தை ஓட விட்டுவிட்டு நீங்கள் கவனத்தை வேறு ஏதாவது திசையில் திருப்பி விட்டால் அதன் மூலம் நமக்கு பலன் இருக்காது. இறுதியாக தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த மாத இறுதிக்குள் நல்லது நடந்தே ஆக வேண்டும் என்ற கோரிக்கையை முருகப்பெருமானிடம் நம்பிக்கையோடு வையுங்கள்.

lord-muruga1

உங்களால் மேல் சொன்ன விஷயங்கள் எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. பூஜையறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு முருகப்பெருமானின் முன்பு அமர்ந்து கண்களை மூடி ‘ஓம் முருகா! ஓம் முருகா! ஓம் முருகா!’ என்ற மந்திரத்தை சொல்லி மனதார தியானத்தில் ஈடுபட்டு, மனம் உருகி முருகப்பெருமானிடம் வேண்டுதலை வைத்தாலும் நீங்கள் எண்ணிய எண்ணம் எல்லாம் நிறைவேறும். நிச்சயமாக உங்களுக்கு நடக்க வேண்டிய நல்லது, இந்த மாத இறுதிக்குள் நடந்தே தீரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Author: admin