புதிய டெல்டா பிளஸ் வகை கோவிட் கண்டுபிடிப்பு!

Read Time:1 Minute, 36 Second

முதல் முதலாக இந்தியாவில் திரிப்படைந்து அதிக பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்திய டெல்டா வகை கோவிட், தற்பொழுது மேலும் உருமாறி டெல்டா பிளஸ் ஆக மாற்றம் அடைந்துள்ளது,

தற்பொழுது இந்த வைரஸ் இந்தியாவில் குறைவாகவே காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த புதிய வகை டெல்டா பிளஸ் கூர்முனை புரதத்தில் மாற்றம் ஏற்படுள்ளதாகவும், மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புது வகை டெல்டா கோவிட் வைரஸ் உதவுவதாகவும் டெல்லி மரபியல் ஒருங்கிணைப்பு உயிரியல் விஞ்ஞானி வினோத் ஸ்காரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டெல்டா அதி வேகமாக பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மக்களிடையே இது பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,

ஆறுதல் அளிக்கும் செய்தி இந்த டெல்டா பிளஸ் குறைந்த அளவிலே தற்பொழுது இந்தியாவில் காணப்படுவதாக வந்த செய்தி,

இதை பெரிதாக எடுக்கவிடாலும், சமூக இடைவெளி, மற்றும் கோவிட் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கவனமாக இருத்தல் அவசியம்.

Author: admin