தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர் உயிரிழப்பு!

sankari vijay
sankari vijay

இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னட நடிகர் சஞ்சரி விஜய் காலமானார்.

2011 முதல் கன்னட திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் சஞ்சரி விஜய். ‘Naanu Avanalla.Avalu’ என்கிற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார் சஞ்சரி விஜய்.

தனது நண்பர் நவீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழுக்கி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியதில் பலத்த காயங்களுடன் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சஞ்சரி விஜய் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு எடுத்ததைத் தொடர்ந்து சஞ்சரி விஜய் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

38 வயதான சஞ்சரி விஜய்யின் திடீர் மரணம், கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Author: admin