சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!

school
school

ஜனவரியில் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட பள்ளிகள் கொரோனா இரண்டாவது அலை காரணமாக, மீண்டும் மே மாதம் அடைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம்.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விபரங்களை கல்வி மேலாண்மை தாக்கல் முறைமை இணையதளத்தில் வெளியிடவும் அறிவுறுத்தியுள்ளது.

Author: admin