யூரோ 2021: நான்காம் நாள் நாயகர்கள்!

euro cup 2021

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் 2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நேற்று எழுதியிருந்த முத்தான மூன்று போட்டிகள் கட்டுரைக்குப் பின்னர், நான்காம் நாளில் மூன்று போட்டிகள் நடந்துள்ளன

(1) ஸ்காட்லாந்து Vs செக் குடியரசு இந்திய நேரப்படி 18.30 மணிக்கு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உள்ள ஹாம்ப்டன் பார்க் மைதானத்தில் நடந்தது
(2) போலந்து vs ஸ்லோவாக்கியா ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கிரெஸ்டோவ்ஸ்கி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி 21.30 மணிக்கு நடந்தது.
(3) ஸ்பெயின் vs ஸ்வீடன் ஸ்பெயினில் உள்ள கிரெஸ்டோவ்ஸ்கி ஸ்டேடியத்தில் 15 ஜூன் 2021 அன்று இந்திய நேரப்படி 00.30 மணிக்கு நடைபெற்றது.

ஸ்காட்லாந்து Vs செக் குடியரசு

scotland czeck
scotland czeck

முதல் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ மவுண்ட் புளோரிடா பகுதியில் உள்ள ஹாம்ப்டன் பார்க் கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. 51,866 மக்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய திறன் கொண்ட மைதானமாகவும் ஸ்காட்லாந்தின் தேசிய கால்பந்து மைதானமாகவும் இது செயல்படுகிறது.

1937ஆம் ஆண்டில் இந்த அரங்கத்தின் திறன் 1,50,000 ஆகும். பேட்ரிக் ஷிக்கின் இரட்டை கோல்கள் ஸ்காட்லாந்தின் யூரோ 2020 தொடக்கத்திற்கான வாய்ப்பைக் கெடுத்தன. ஹேம்ப்டன் பூங்காவில் செக் குடியரசு 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியின் அரை நேரத்தின் முன்னும் பின்னும் வியக்கத்தக்க இரண்டு கோல்கள் அடித்து ஸ்காட்லாந்தின் யூரோ 2020 குரூப் டி தொடக்க ஆட்ட வெற்றியை செக் குடியரசு அணி கெடுத்தது. ஷிக் தனது நாட்டிற்காக தனது 11 வது மற்றும் 12 வது கோல்களை அடித்தார். இவர் ஒரு ஃபார்வேர்ட் வீரர்.

இந்த இரண்டு கோல்களின் ஒரு பெரிய போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்க 23 ஆண்டுகள் காத்திருந்த நிலையில், ஸ்காட்லாந்து இப்போது இந்த ஏமாற்றமளிக்கும் தொடக்கக் குழு டி தோல்வியின் பின்னர் முதல் புள்ளிகளைப் பெற இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஸ்காட்லாந்து அனியினர் நன்றாக விளையாடினர். அவர்கள் கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கினர். அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. இருப்பினும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

போலந்து Vs ஸ்லோவாக்கியா

poland vs slov

ஸ்லோவாக்கியா 2-1 என்ற கோல் கணக்கில் போலந்திற்கு எதிராக ஆச்சரியமான வெற்றியைப் பெற்றது. 18ஆவது நிமிடத்தில் ஸ்லோவாக்கியாவின் ‘ஃபார்வேர்ட்’ ஆர். மேக் ஒரு அற்புதமான தனி கோலை அடித்தார். ஆனால் போலந்தின் கோல் கீப்பர் அதனைத் தடுக்க முயன்றார். அதனால் அந்த கோல் அவர் போட்ட ‘தனக்குத்தானே’ கோல் ஆகிவிட்டது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய உடனேயே போலந்து 46ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தது. போலந்து வீரர் கிளிச், ரைபஸுக்கு ஒரு பந்தை அனுப்பினார். பின்னர் அவர் நடுப்பகுதி வழியாக ஒரு சுத்தமான வெட்டு அடி ஒன்றை அடித்தார். இது லினெட்டியை அடைந்தது. லினாட்டி அடித்த அடி பந்தை ஸ்லோவாக்கியாவின் கோல்கீப்பர் துப்ராவ்காவின் நீட்டிய கையைத் தாண்டி கோலுக்குப் போக வைத்தது.

இரு அணிகளும் கடினமாக விளையாடினர். அந்த நேரத்தில் 62ஆவது நிமிடத்தில் போலந்து அணி வீரர் ஒருவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. கிரிச்சோவியாக் இரண்டாவது முறை மஞ்சள் அட்டை பெற்றதால் வெளியே அனுப்பப்பட்டார். 69ஆவது நிமிடத்தில் ஸ்லோவாக்கியாவின் இரண்டாவது கோலை எம். ஸ்க்ரினியர் அடித்தார்.

மேக்கின் கார்னர் ஷாட் ஒன்றினை சந்தித்த ஸ்க்ரினியர் அதனைக் கோலாக்கினார். அடுத்த 20 நிமிடங்களில் ஸ்லோவாக்கியா போலந்து மற்றொரு கோலை அடிக்க அனுமதிக்கவில்லை, இதனால் போலந்துக்கு எதிரான போட்டியை ஸ்லோவாக்கியா 2-1 என்ற கோல் கணக்கில் கணக்கில் வென்றது.

ஸ்பெயின் vs ஸ்வீடன்

spain vs sweeden

இந்தப் போட்டி லா கார்டூஜா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஸ்பெயின் ஸ்வீடனுக்கு எதிரான யூரோ 2020 பிரச்சாரத்தை நேற்று செவில்லிலுள்ள எஸ்டாடியோ லா கார்டூஜாவில் தொடங்கியது. இந்தப் போட்டிக்கு முன்னால் ஸ்பெயின் அணியில் கொரொனா தொற்றால் சில பிரச்சனைகள் இருந்தன.

போட்டியின்போது இரு அணிகளும் ஏராளமான வாய்ப்புகளை வீணடித்தன. ஸ்வீடன் அணி கோல் போடும் இரண்டு பெரிய வாய்ப்பை வீணடித்தது. ஆனால் நாள் முடிவில், இது ஸ்வீடனுக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

Author: admin