’சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை’ – கொரோனா நோயாளி வெளியிட்ட வீடியோ பதிவு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என கொரோனா நோயாளி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நாகர்பாளையம் தனியார் பள்ளி விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 150-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்றும், மருத்துவர்கள் யாரும் கவனிப்பதில்லை என்றும், குப்பைகள் கூட அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதாகவும் கொரோனா நோயாளி ஒருவர் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Author: sivapriya