சவுத்தாம்டனில் தொடரும் மழை: இந்தியா Vs நியூசிலாந்து போட்டியின் டாஸ் தாமதமாக வாய்ப்பு

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டாஸ் போடும் நிகழ்வு தொடர் மழை காரணமாக தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்டனில் இருக்கும் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் நகரில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே இருக்கிறது. ஆனால் மழை இன்னும் ஓயவில்லை. மைதானத்தின் முக்கியப் பகுதிகள் ராட்சத கவர்களால் மூடப்பட்டுள்ளது. இதனால் இரு அணி கேப்டன்கள் பங்கேற்கும் டாஸ் போடும் நிகழ்வு தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

சவுத்தாம்டன் நகரில் இன்று காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் நகரின் சில பகுதிகளில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமையில் இருந்து மழை படிப்படியாக குறையும் என்று இங்கிலாந்து வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Author: sivapriya