சட்டமன்ற கூட்டத் தொடரை நேரலை செய்யும் திட்டம் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரை நேரலை செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 16ஆவது சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. பேரவை மரபு படி கூட்டத் தொடரில் உரையாற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து, சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டத் தொடரை நேரலை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஜனநாயக நெறிப்படி சட்டப்பேரவையில் விருப்பு வெறுப்பின்றி அனைத்து கட்சியினருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும் என அப்பாவு கூறினார்.

Author: sivapriya