இனி கத்திரிக்காயில் குழம்பு, வதக்கல் எதுவுமே செய்ய மாட்டீங்க! இந்த ‘வெரைட்டி ரைஸ் கத்திரிக்காய் சாதம்’ ரெசிபியை தெரிஞ்சிக்கிட்டா அடிக்கடி இதை மட்டும்தான் செஞ்சு சாப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க.

கத்திரிக்காயை வைத்தது ஒரு வெரைட்டி ரைஸ் ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கர்நாடகாவில் இதை வாங்கி பாத் (vangi bath) என்று சொல்லுவார்கள். எத்தனை நாளைக்குத்தான் குழம்பு ரசம் என்று செய்வது. ஒருநாள் வித்தியாசமாக கத்தரிக்காயை வைத்து இந்த வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிட்டு தான் பார்ப்போமே. இந்த சாதம் செய்வதற்கு முதலில் நாம் ஒரு பொடியை அரைத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

vangi-bath3

அந்த பொடி தயார் செய்ய தேவையான பொருட்கள். வரமல்லி – 1 டேபிள்ஸ்பூன், வரமிளகாய் – 4 லிருந்து 5 காரத்திற்கு ஏற்ப, தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், கசகசா – 1/4 ஸ்பூன், வெந்தயம் – 10, சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், பட்டை – 1 துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் – 1, கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்.

ஒரு அகலமான கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, எல்லா மசாலாப் பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல், பொடி போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மசாலாவை பொடிசெய்து, ஸ்டோர் செய்தும் நாம் பயன்படுத்தலாம். ஆனால் எண்ணெய் ஊற்றாமல், ட்ரை ஃபிரை செய்து அரைத்து ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் கெட்டுப் போகாமல் இருக்கும்.

vangi-bath1

250 கிராம் அளவு உள்ள வடித்த சாதத்திற்கு இந்த ரெசிபியில் கொடுக்கப்படும் அளவுகள் சரியாக இருக்கும். சாதத்தை குழையாமல் வடித்து ஆறவிட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து திக்கான புளிக் கரைசலை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். (அந்த புளிக்கரைசல் மொத்தமாக 2 டேபிள் ஸ்பூன் அளவு தான் இருக்க வேண்டும்.) ஐந்து கத்தரிக்காய்களை எடுத்து தண்ணீரில் கழுவி நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

vangi-bath

இப்போது சாதத்தை தாளிக்கலாம். ஒரு அகலமான கடாயில் 3 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, வேர்கடலை – 1 ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, இந்த பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

vangi-bath4

அடுத்தபடியாக நீளமாக நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம் – 1, இதோடு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி அடுத்தபடியாக தயாராக இருக்கும் கத்தரிக்காய்களை எண்ணெயில் போட்டு 2 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். இந்த கத்திரிக்காய் உடன் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை சேர்த்து விடுங்கள். புளிக்கரைசல் எக்காரணத்தைக் கொண்டும் தண்ணியாக இருக்க கூடாது. புளிக்கரைசலை கத்திரிக்காய் முழுமையாக உறிஞ்சி விடவேண்டும்.

vangi-bath5

கத்தரிக்காய் நன்றாக வதங்கிய உடன் வறுத்து பொடி செய்து வைத்திருக்கும் மசாலாவை கடாயில் சேர்த்து விடுங்கள். இதோடு 1/4 ஸ்பூன் அளவு வெல்லம் பொடியையும் சேர்த்து, வடித்து வைத்திருக்கும் சாதத்தையும் கடாயில் உதிரி உதிரியாக கொட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் சாதத்தை மசாலாவுடன் கிளறிவிட வேண்டும். இறுதியாக தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் நெய் மேலே ஊற்றி விடுங்கள். சிறிய கப் வெங்காயரைத்தவுடன் பரிமாறி பாருங்கள். அட்டகாசமான சுவையில் ஒரு வித்தியாசமான கத்தரிக்காய் சாதம் தயார். மிஸ் பண்ணாம செஞ்சி பாருங்க.

Author: admin