பூஜை அறையில் ஏற்றும் விளக்கில் பச்சை பிடிப்பதற்கு என்ன காரணம்? அதன் பலன்கள் என்ன?

பொதுவாக நாம் நம் வீட்டில் பூஜை அறையில் ஏற்றும் விளக்கில் பச்சை நிறம் பிடிப்பதை பார்த்தால் அது சரியா? தவறா? என்று யோசித்திருப்போம். விளக்கில் பச்சை நிறம் பிடிப்பது அவ்வளவு நல்லது அல்ல! அது குடும்பத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும். விளக்கில் பச்சை நிறம் பிடிக்க சரியான காரணம் என்ன? அப்படி ஆகாமல் இருக்க என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

kamatchi-vilakku

ஒவ்வொரு வீட்டிலும் காலை, மாலை காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் அந்த வீட்டின் செல்வ வளத்திற்கும், நிம்மதிக்கும் குறைவில்லாமல் இருக்கும் என்பது சாஸ்திர உண்மை. இதை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்பது தெரிவதில்லை ஆனால் இப்படி செய்து வந்தால் நிச்சயம் குடும்பம் சுபிட்சம் பெறும்.

உலக மக்களின் நன்மைக்காக காமாட்சி அம்மன் அவதாரம் புரிந்ததாக புராணங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அதற்காக காமாட்சி அம்மன் தவம் புரிந்ததால் அனைத்து தேவர்களும், அனைத்து கடவுள்களும் அவர்களுக்குள் ஐக்கியமாகியாதாக கூறப்படுகிறது. அதனால் தான் எல்லா கடவுளின் அருள் பெறவும், குடும்பத்தில் வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்றையாவது கட்டாயம் தினமும் ஏற்றி வைப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

kamatchi vilakku

பெரும்பாலான வீடுகளில் குத்து விளக்கை விட காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வழிபடுவது உண்டு. விசேஷம், பெரு விழாக்களின் பொழுது மட்டுமே குத்து விளக்கை ஏற்றி வைப்பார்கள். அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த காமாட்சி அம்மன் விளக்கு எப்படி இருக்கும் தெரியுமா? விளக்கில் அம்மனுக்கு இருபுறமும் யானை வடிவம் பொரிந்து வைத்திருந்தால் அது காமாட்சி அம்மன் விளக்கு அல்ல! அது கஜலட்சுமி விளக்கு ஆகும். காமாட்சி அம்மன் கையில் கரும்புடன் ஏந்தி காட்சி அளிப்பாள். அதுவே உண்மையான காமாட்சி அம்மன் விளக்கு ஆகும். கஜலட்சுமி அம்மன் விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு எதுவாக இருந்தாலும் நன்மைகள் தான் ஆனால் காமாட்சி அம்மன் விளக்கு என்பது இப்படித்தான் இருக்கும்.

சாஸ்திரப்படி வீடுகளில் சுத்தமான பசு நெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை கொண்டு காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வைப்பது சகல செல்வங்களையும் கொடுக்கும். பசு நெய் வாங்கி ஏற்றும் அளவிற்கு வசதி இல்லை என்றாலும் நல்லெண்ணெய் வாங்கியாவது தீபம் ஏற்றுவது நலம் தரும். ஆனால் மற்ற எண்ணெய்களை கொண்டு நீங்கள் ஏற்றும் பொழுது அதில் இலுப்பை எண்ணெய் கலந்து இருந்தால் நிச்சயம் பச்சை பிடிக்கும்.

iluppai-oil

இலுப்பை எண்ணெய் கலந்த சில கலப்பட எண்ணெய்கள் இந்த மாதிரியான நிறத்தை உண்டு பண்ணுகின்றன. எந்த எண்ணெயாக இருந்தாலும் அதில் கலப்படம் இல்லாத எண்ணெயாக இருப்பது நல்லது. உண்மையாகவே இலுப்பை எண்ணெயை மட்டும் பயன்படுத்தி கூட தீபம் ஏற்றலாம் ஒன்றும் ஆகாது. ரெண்டு எண்ணெய்கள் கலக்கும் பொழுது தான் இது போன்ற பிரச்சனைகள் வருகிறது. வாரம் ஒரு முறை மட்டும் தீபம் ஏற்றுபவர்கள் எண்ணெய் மற்றும் திரியை பயன்படுத்திய மறுநாள் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

thiri1

அப்படியே விட்டுவிட்டாலும் இது போன்ற பிரச்சனைகள் வரும். இதனால் குடும்பத்தில் தரித்திரம் பிடிக்கும். தினமும் பயன்படுத்துபவர்கள் திரியை மாற்றிவிடுவது நல்லது. நன்றாக இருந்தாலும் கூட அதே திரியை பயன்படுத்தக் கூடாது. தொடர்ந்து பசு நெய் கொண்டு தீபம் ஏற்றி பாருங்கள். இது போன்ற எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. வீட்டில் நல்ல ஒரு சுபிட்சமும் உண்டாகும், அதை நீங்கள் உணரலாம்.

Author: admin