மூளையின் செயல்பாட்டை கண்காணிக்க ரூ.37 லட்ச மதிப்பிலான ஹெல்மெட் தயாரித்த அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவை சேர்ந்த கெர்னல் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், 50,000 டாலர் மதிக்கத்தக்க (இந்திய மதிப்பில் 37 லட்சம்) ஹெல்மெட் ஒன்றின் விற்பனையை தொடங்கவுள்ளது. இது, அமெரிக்காவில் மட்டுமே தற்போதைக்கு விற்பனை செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அளவுக்கு அதிக விலை ஏன் என்ற கேள்விக்கு, இதில் சென்சார் இருக்குமென்றும், உடன் சில எலெக்ட்ரானிக் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும் கெர்னல் நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இந்த வசதிகள் மூலம், மூளையின் செயல்திறன் மற்றும் ரத்த ஓட்டத்தை கண்காணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

image

இதன் பயன்களை அடைய, பயனாளர்கள் ஹெல்மெட் போட்டுக்கொண்டு அதிலுள்ள யு.எஸ்.பி. கேபிள் வழியாக கம்யூட்டரோடு இணைத்துக்கொண்டால் போதும்.

இந்த ஹெல்மெட், உடலில் ஆக்சிஜன் அளவையும்கூட கண்டறியவும் உதவுமென கூறப்படுகிறது. கெர்னல் நிறுவனம் முதற்கட்டமாக, தங்களின் பொருட்களை ஆராய்ச்சியாளர்களுக்கு ஒப்படைத்து, செயல்திறனை சோதித்து, பயனாளர்களுக்கு எந்தளவுக்கு உதவியாக இருக்குமென சோதிக்க திட்டமிட்டுள்ளது.

Author: sivapriya